கோபத்துடன் மனைவி வெளியிட்ட புகைப்படம்!! திருமணம் செய்த சினேகாவை பிரசன்னா எப்படி அழைப்பார் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்து 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் புன்னகை அரசியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா.
பிரசன்னா - சினேகா
கடந்த 2009ல் நடிகர் பிரசன்னாவை காதலித்த சினேகா 2012ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு குடும்பம் குழந்தைகள் என பார்த்து வந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வரும் சினேகா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது கிறிஸ்டோபர் என்ற பயோபிக் படத்தில் நடித்து வருகிறார் சினேகா.

செல்ல பெயர்
அப்படத்தில் முறைத்தபடி பிஸியாக வேலை செய்யும் சினேகாவின் போஸ்டர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு சினேகாவின் கணவர் பிரசன்னா பார்க்க நன்றாக இருக்கிறது கண்ணம்மா என்று வாழ்த்து கூறியிருக்கிறார். விவாகரத்து வதந்திகளுக்கு இடையில் சினேகா பிரசன்னா இப்படி ரொமான்ஸ் செய்தும் வருகிறார்கள். காதலிக்கும் சமயத்தில் இருந்த சினேகாவை பிரசன்னா கண்ணம்மா என்று தான் அழைத்து வருகிறார். இதை பலர் முறை இணையத்தில் சினேகாவினை நினைவு கூறும் போதெல்லாம் பதிவிட்டு ரொமான்ஸ் செய்து வருகிறார் பிரசன்னா.