திருமணமாகி 12 வருடத்துக்கு பின் எங்களுக்கு விவாகரத்தா!! கட்டிப்பிடித்து முற்றுப்புள்ளி வைத்த நடிகை சினேகா
Prasanna
Sneha
Divorce
By Edward
புன்னகை அரசியாக இருந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த நடிகை சினேகா 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் இரு குழந்தைகளை பெற்றப்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் சினேகா - பிரசன்னா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளியானது.

ஆனால் அதெல்லாம் பொய் என்று பிரச்சனா பதிலளித்திருந்தார். இதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்காத சினேகா, தற்போது கணவர் பிரசன்னாவுடன் எடுத்த ரொமாண்டிக் போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இதனைதொடர்ந்து மீண்டும் மீண்டும் கணவருடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படத்தை பகிர்ந்து விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து வருகிறார்.