அஸ்வினை விட்ருங்க, ட்ரோல் பண்ணது போதும்.. ஆதரவாக வந்த பிரபலம்

By Parthiban.A Dec 09, 2021 06:30 AM GMT
Report

கடந்த சில தினங்களாகவே இணையத்தில் கடும் ட்ரோல்களை சந்தித்து வருகிறார் அஸ்வின். குக் வித் கோமாளி அஸ்வின் என சொன்னால் தான் அவரை மற்றவர்களுக்கு நியாபகம் வரும். புதுமுகமான அவர் தனது முதல் பட விழாவில் எதோ சூப்பர்ஸ்டார் பேசுவது போல பேசியதை தான் நெட்டிசன்கள் மற்றும் மீம் க்ரியேட்டர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதிலும் 40 கதையோட அருமை உனக்கு தெரியுமாடா என விஜய் சேதுபதி அஸ்வினை கேட்பது போன்ற மீம்கள் எல்லாம் ட்ரோல்களின் உச்சகட்டம்.

அஸ்வின் மன்னிப்பும் கேட்டு விட்டார். ஆனாலும் அவரை பற்றிய ட்ரோல் நிற்கவே இல்லை. தற்போது அவருக்கு ஆதரவாக கைதி பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசி இருக்கிறார்.

”சினிமாவில் நாம் பார்க்கும் கதைகளை விட அதிக சுவாரசியங்கள் கதை சொல்லும் நிகழ்வுகளில் உண்டு.பலர் வாழ்வை புரட்டிப்போடும் தருணம் என்பதால் அது சற்றே அந்தரங்கமான விசயமும் கூட. அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஓர் சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக. அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்!” என அவர் பதிவிட்டு உள்ளார்.