சூர்யா பட நடிகையிடம் அத்து மீறிய மாணவனுக்கு காலேஜ் நிர்வாகம் கொடுத்த தண்டனை.
தமிழ், மலையாளம் என இரண்டு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை அபர்ணா பாலமுரளி. இவர் சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார்.
தற்போது அபர்ணா நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள தங்கம் திரைப்படம் வருகின்ற ஜனவரி 26-ம் தேதி வெளியாகயுள்ளது. இப்படத்தின் ப்ரமோஷனுக்காக கேரளாவில் உள்ள சட்ட கல்லூரிக்கு சென்றுள்ளார்.

அத்து மீறிய மாணவன்
அப்போது விஷ்ணு என்ற மாணவர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார். அந்த நேரத்தில் திடீரென்று அந்த மாணவன் அபர்ணாவின் தோள் மீதி கை வைத்துள்ளார். அப்போது அபர்ணா அங்கிருந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து பல பிரபலங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த மாணவனை எர்ணாகுளம் சட்ட கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.