பிரபல யூடியூபர் சுதர்சன் மீது வரதட்சனை கொடுமை வழக்கு!! காதல் மனைவி கொடுத்த புகார்..
யூடியூபர் சுதர்சன்
மொபைல் போன், டிவி, லேப்டப் போன்ற டெக்னாலஜி சம்பந்தமான கேட்ஜெட்கள் பற்றி விமர்சனம் செய்து யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் தான் சுதர்சன். டெக் பாஸ் என்ற யூடியூப் மூலம் இயங்கி வந்த சுதர்சன், அதிலிருந்து வெளியேறி டெக் சூப்பர் ஸ்டார் சேனலை ஆரம்பித்து நடத்தி வந்தார்.
பல லட்சம் பாலோவர்ஸ்களை பெற்றுள்ள சுதர்சன் மீது, அவரது மனைவி விமலா தேவி வரதட்சணை கொடுமை செய்வதாக கூறி புகாரளித்துள்ளார். மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டாக்டராக 4 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார் சுதர்சன் மனைவி.
அப்போதில் இருந்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் மதுரை வளையாபதி திருமண மண்டபத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு விமலா தேவியின் பெற்றோர் 30 பவுன் தங்க நகையும், ரூபாய் 5 லட்சம் தொகை மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் என்று கொடுத்துள்ளனர்.
வரதட்சணை கொடுமை
30 பவுன் நகையை சுதர்சன் சொந்தமாக வீடு கட்டும் போது பெற்றுக்கொண்டதாகவும் வீடு கட்டி புது வீட்டிற்கு குடிபோன நிலையில், வீட்டுக்கடனை அடைக்க முடியவில்லை என்பதால் சுதர்சனின் பெற்றோர், மருமகள் விமலா தேவியிடம் வரதட்சணை கூடுதலாக கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், டாக்டருக்கு படிச்சு என்ன சம்பாதிச்சு கொடுக்குற, வீட்டுக்கே பத்தல..இன்னும் 20 பவுன் நகை கொண்டு வந்தா தான் வீட்டில் வைத்திருப்போம் என்று மிரட்டியிருக்கிறார்கள் சுதர்சன் பெற்றோர் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார் விமலா தேவி.
மேலும், ரூ. 10 லட்சம் பணத்தையும் பெற்றுக்கொண்டு 30 பவுன் நகையை விற்று மேலும் 20 பவுன் நகை கொண்டு வந்தால் தான் இங்கு வாழ முடியும் என்று அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக சுதர்சன் மற்றும் அவரது குடும்பதினர் மீது புகாரளித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது, பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.