கிழிந்த உடையில் பைத்தியமாக தெருவில் சுற்றித்திரிந்த நடிகை!! பிரபலம் சொன்ன தகவல்...

Gossip Today Indian Actress Actress
By Edward Jul 22, 2025 03:45 PM GMT
Report

சுமி ஹர் செளத்ரி

கொல்கத்தாவை சேர்ந்த பிரபல நடிகையான சுமி ஹர் செளத்ரி, புர்பா பர்தாமன் பகுதியில் கிழிந்த அழுக்கு உடையில் தெருவில் சுற்றித்திருந்தபோது அவரை மீட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பல படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சுமி ஹர் செளத்ரி.

கிழிந்த உடையில் பைத்தியமாக தெருவில் சுற்றித்திரிந்த நடிகை!! பிரபலம் சொன்ன தகவல்... | Sumi Har Chowdhury Found Wandering The Street

த்விதியோ புருஷ், காஷி கதா : எ கோட் உள்ளிட்ட படங்களிலும் ரூப்சாகரே மோனர் மனுஷ் , துமி ஆஷே பாஷே தாக்லே போன்ற தொலைக்காட்சி தொடர்கலிலும் நடித்து பிரபலமானார்.

தற்போது மேற்கு வங்காளம் புர்பா பர்தாமன் மாவடத்தில் அமிலா பஜார் அருகே, சாலையோரத்தில் தான் யாரென்றே தெரியாத அளவிற்கு மனநலம் மாதிக்கப்பட்ட நிலையில் சுமி ஹர் செளத்ரி மீட்கப்பட்டுள்ளார். உள்ளூர் மக்கள் அவரை பார்த்து விசாரித்தும் எந்த பதிலும் சொல்லாமல் இருந்துள்ளார் சுமி ஹர் செளத்ரி.

கிழிந்த உடையில் பைத்தியமாக தெருவில் சுற்றித்திரிந்த நடிகை!! பிரபலம் சொன்ன தகவல்... | Sumi Har Chowdhury Found Wandering The Street

கிழிந்த அழுக்கு உடை

கிழிந்த அழுக்கு உடையுடன் தெருவில் சுற்றித்திரிந்ததால் அப்பகுதி மக்கள் விசாரித்ததில் அவர் நடிகை என்று பேப்பரில் எழுதிருப்பதை அறிந்தனர். அவர் யாரென்று கூகுளில் இளைஞர்கள் தேடி பார்த்து அதிர்ச்சியாகி உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

காவல் துறையினர் விசாரித்து காப்பகத்தில் அனுப்பி வைத்தும் அவரது குடும்பத்தினர் எங்கே? என்ன நடந்தது, எப்படி இந்த நிலைமைக்கு பெரிய நடிகை தள்ளப்பட்டார் என்று விசாரித்து வருவதாக பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டியொன்றில் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார்.