சீரியலுக்கு குட் பாய்!! கர்ப்பமானதும் அதிர்ச்சி கொடுத்த சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா..
சுந்தரி கேப்ரியல்லா
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் மக்களிடம் மிகவும் பிரபலம். டாப் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் சுந்தரி சீரியல் இடம்பெற்றுவிடும். ஒரு நேர்மையான கலெக்டராக தனது வேலையை செய்யும் சுந்தரிக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள், சவால்கள் வருகின்றன. அதையெல்லாம் நேர்மையாக எதிர்க்கொண்டு மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றது.
விரைவில் இந்த சீரியல் முடியப்போகிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில் சுந்தரி சீரியலில் கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படங்களை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்தார் சீரியல் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.
மீடியாவுக்கு பிரேக்
கண்ணீர் மல்க அழுது சீரியல் குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து நன்றி கூறியதை அடுத்து, கேப்ரியல்லா தன் கணவரை பிரியவுள்ளதாக செய்திகள் வெளியாகியது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்.
தற்போது நன்றி சென்னை மீண்டும் அன்போடு பிறகு சந்திப்போம், என்னுடைய மீடியா பயணத்திற்கு ஓய்வு என்று கூறி ஒரு பதிவினை பகிர்ந்து சொந்த ஊரான திருச்சிக்கு சென்றுள்ளார் கேப்ரியல்லா. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களோடு மிஸ்யூ அக்கா என்றும் கூறி வருகிறார்கள்.