அந்த பருவம் இப்படியொரு கஷ்டத்தை கொடுத்தது! புலம்பித்தள்ளும் சூப்பர் சிங்கர் அல்கா அஜித்..
தொலைக்காட்சி சேனல்களில் தற்போது ரியாலிட்டி ஷோக்கள் பல ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்படி பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
சூப்பர் சிங்கர் 2
ஜூனியர், சீனியர் என போட்டியாளர்களை வைத்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்கள் மாகாபா ஆனந்த், பிரியங்கா. அப்படி பலர் இந்த நிகழ்ச்சி மூல வெள்ளித்திரை திரைப்படங்களில் பாடல் பாடி அசத்தி பிரபலங்களாக வருகிறார்கள். அந்தவகையில், 2009ல் நடைபெற்ற சூப்பர் சிங்கர் சீசன் 2 ஜூனியர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டவர் தான் அல்கா அஜித்.
25 லட்சம் மதிப்புள்ள வீட்டினை பரிசாக பெற்றார் அல்கா. இதனை அடுத்து ஒருசில படங்களில் பாடிய பின் தற்போது சென்னையில் இருந்து வருகிறார். கேரளத்தில் பிறந்து 2009 ஆம் ஆண்டில் இருந்து சென்னையில் வசித்து வரும் அல்கா இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது 26 வயதாகும் அல்கா அஜித், கல்லூரி வாழ்க்கையை நான் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன்.
கடினமான வாழ்க்கை
ஆனால் பள்ளி பருவத்தை பற்றி எதுவும் கேட்காதீர்கள். அது ரொம்ப கஷ்டத்தை எனக்கு கொடுத்துள்ளது. அப்படியென்றால் கேரளாவில் பள்ளிப்படிப்பை கொடுத்த போது அல்கா அஜித்திற்கு என்ன நடந்தது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் அவருக்கு வேறொரு வாழ்க்கையை கொடுத்துள்ளது என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
