60 லட்சம் வீட்டை இன்னும் வாங்கல!! சூப்பர் சிங்கர் 9 அருணா கொடுத்த ஷாக்...
சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 அருணா
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றும் சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் பலர் பிரபலமாகுவதோடு சினிமா வாய்ப்பையும் பெற்று வருகிறார்கள்.
அந்தவகையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 சீசனில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலை கைப்பற்றி 50 லட்சம் வீடு, 10 லட்சம் தொகையையும் பரிசாக பெற்றவர் தான் அருணா. இந்நிகழ்ச்சி பின் ஒருசில கச்சேரிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
60 லட்சம் வீடு
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் 60 லட்சம் ரூபாயில் கொடுத்த வீட்டினை இன்னும் வாங்கவில்லை என்று கூறி அதற்கான காரணத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், 60 லட்சம் மதிப்புள்ள ஒரு பரிசு கொடுக்கிறார்கள் என்றால் அதற்காக அரசு வரி கொடுக்க வேண்டும்.
பரிசு கொடுப்பவர்கள் பெருந்தன்மையாக கொடுத்துவிடுவார்கள். நாம் அதற்கான வரியை செலுத்தினால் தான், அதை நமக்கு சொந்தமாக்கிக்கொள்ள முடியும், அதுதான் அரசு ரூல்ஸ்.
அதனால் அந்த வீட்டிற்காக வரி என்பதை பார்க்கும்போது சில லட்சம் கொடுக்க வேண்டும். பெரிய தொகையாக இருப்பதால், இன்னும் வரிக்கட்டி எங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளவில்லை.
நாங்கள் டைம் கேட்டிருக்கிறோம், ஒரு வருடமாகிவிட்டது, கொஞ்சம் கொஞ்சமாக தான் கொடுக்க முடியும். 15 லட்சத்திற்கு மேல் இருப்பதால் நாங்கள் அதை கட்டிவிட்டு எல்லோருக்கும் கூறுவோம் என்று அருணா தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் தற்போது நெட்டிசன்களிடையே குழப்பத்தையும் கேள்விகளை எழுப்பி வருகிறது.
சூப்பர் சிங்கர்ல குடுத்த வீட இன்னும் வாங்க முடியலையாம்..
— Stand With Savukku (@Karthickrames1) December 16, 2024
அடப்பாவிங்களா.... pic.twitter.com/sXXbEez7dg