நான் அஜித் ஃபேன்..விஜய் பத்தி பேசுனா நாகரீகமா இருக்காது!! டிடிவி தினகரன்
அஜித்தே
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலர் அவரை கொண்டாடும் விதமாக பல இடங்களில் கடவுளே அஜித்தே என்ற கோஷத்தை வெளிகாட்டி வருகிறார்கள். இதனை விஜய் அரசியல் மாநாட்டிலும், பல அரசியல் தலைவர்களின் நிகழ்ச்சிகளிலும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தன்னை அப்படி அழைக்கவேண்டாம் என்று அஜித் கூறிய நிலையில் அஜித்தே என்ற கோஷத்தை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் கடவுளே அஜித்தே என்ற கோஷம் எழுந்துள்ளது.
டிடிவி தினகரன்
இதுகுறித்து அவர் கூறுகையில், கடவுளே அஜித்தே என்ற கோஷம் எழுந்தது, அது என்ன என முதலில் புரியாததால் பின் உதவியாளரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அதன்பின் நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன் என்று பத்திரிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதிரியாக செய்திகளிளை வெளியிட்டனர்.
நான் அதிர்ச்சியாகவில்லை, நானும் அஜித் ஃபேன் தான். அஜித்தை எனக்கும் பிடிக்கும். பல பேட்டிகளிலும் நான் சொல்லி இருக்கிறேன், பல குழந்தைகளுக்குகூட நான் அஜித் பேரை வைத்துள்ளேன். அதற்காக எனக்கு விஜய்யை பிடிக்காதுன்னு இல்லை, அவரையும் பிடிக்கும். அவர் படத்தையும் பார்ப்பேன்.
மேலும், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது ஒன்றும் படமில்லை, அவர் ஒரு கட்சி தொடங்கி, கொள்கை, கோட்பாடு என்றெல்லாம் கூறியிருக்கிறார். இதில் நான் கருத்து தெரிவிக்க ஏதுமில்லை. அப்படி கருத்து தெரிவிப்பதுகூட நாகரீகமாக இருக்காது என்று செய்தியாளர்களிடம் தன்னுடைய கருத்தினை பகிர்ந்துள்ளார் டிடிவி தினகரன்.