திருமணமாகி 45 நாளில் மனைவியுடன் இப்படியொரு நிகழ்ச்சி! சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா செய்த செயல்..
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர் என்று இரு பிரிவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் ஜூனியர் 8 வது சீசன் சமீபத்தில் தான் நடந்து முடிந்துள்ளது. நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற பலர் சினிமாவில் பாடகர்களாக பிரபலமாகி வருகிறார்கள்.
அப்படி சூப்பர் சிங்கர் சீனியரில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் அஜய் கிருஷ்ணா. குட்டி உதித் நாராயணன் என்று மக்களால் அழைக்கப்பட்டு வரும் அஜய் சமீபத்தில் ஒருசில பாடல்களில் பாடியும் இருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு மே 13 ஆம்தேதி அஜய் கிருஷ்ணாவுக்கும் ஜெஸ்ஸி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

பல வருடங்களாக காதலித்து வந்த இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சீசன் 4ல் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
முதன்முறையாக நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஜோடியிடம் மாகாபா ஆனந்த் எப்போ கல்யாணம் ஆச்சி என்ன தேதி என்று கேட்டுள்ளார். அதற்கு ஜூன் 13ன்னு சொன்னா கிழிகிழுன்னு அடிப்பா என்று கூறியதும் ஜெஸ்ஸி அதிர்ச்சியாகியுள்ளார்.
அதன்பின் மே 13ன் என்று கூறியுள்ளார் அஜய். இதற்கு மாகாபா தன் பாணியில் அவரை கலாய்த்து அடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.