சூப்பர் சிங்கர் ஜூனியர் 10ல் கதறிய பாடகி அனுராதா ஸ்ரீராம்!! வைரலாகும் வீடியோ..

Super Singer Star Vijay Tamil TV Shows Tamil Singers
By Edward Mar 29, 2025 09:30 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10ல் கதறிய பாடகி அனுராதா ஸ்ரீராம்!! வைரலாகும் வீடியோ.. | Super Singer Junior 10 Top 10 Selection Lynet Sing

இந்த வாரம் ’டாப் 10 செலக்‌ஷன் வித் விஜய் ஸ்டார்ஸ்’ என்ற டாஸ்க் நடந்து வருகிறது. பல போட்டியாளர்கள் சிறப்பாக பாடி வரும் நிலையில், சூப்பர் சிங்கர் லைனெட் பாடியது தற்போது பலராலும் வரவேற்பை பெற்று வருகிறது.

அதிலும் ஐ படத்தில் என்னோடு நீ இருந்தால் பாடலை லைனெட் பாட, விஜய் டிவி பிரபலங்கள் நடனமாடியுள்ளனர். அதில், நடிகர் சபரி, மிருகம் போல் வேஷம் போட்டு பாடகி அனுராதா ஸ்ரீராமை பயமுறுத்தியுள்ள பிரமோ வீடியோ வைரலாகி வருகிறது.