சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீயா இது!! காவாலா பாடலுக்கு தமன்னாவுடன் இப்படியொரு ஆட்டம்..
Rajinikanth
Tamannaah
Viral Video
Jailer
By Edward
விஜய் தொலைக்காட்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரபலங்கள் வரிசையில் இருப்பவர் தான் சூப்பர் சிங்கர் பிரபலம் நித்யஸ்ரீ.
சூப்பர் சிங்கர் போட்டியாளராக சிறுவயதில் கலந்து கொண்டும் கடைசி 5 இடத்தினை பிடித்தும் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நல்ல பெயரை பெற்றார்.
அதன்பின் ஒருசில பாடல்களை பாடியும் கச்சேரி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் தான் உயர்தர கார் ஒன்றினை வாங்கிய நித்யஸ்ரீ, இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு நடிகை தமன்னாவுடன் இணைந்து ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.