18 வயதில் மிஸ் இந்தியா..சினிமாவைவிட்டுவிட்டு Vlogger-ஆன மறைந்த நடிகரின் மருமகள்..
தர்மேந்திரா
மறைந்த புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் குடும்பத்தில் ஏராளமானோர் திரைத்துறையில் இருக்கிறார்கள். அவரது குடும்பத்தின் 3 தலைமுறைகளும் பாலிவுட்டில் நடித்து வருகிறார்கள்.
சன்னி தியோல், பாபி தியோல், ஈஷா தியோல், அபய் தியோல் மற்றும் அவரது பேரன் கரண் தியோ ஆகியோர் பாலிவுட்டில் நடித்து வருகிறார்கள்.

ஆனால் இவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பாலிவுட்டில் நுழைவதற்கு பதிலாக வேறு துறையில் ஆர்வத்தை ஈடுபடுத்தியிருக்கிறார். அவர் தான் தர்மேந்திராவின் மருமகள் தீப்தி பட்நாகர்.
தீப்தி பட்நாகர்
உத்திரபிரதேசம் மீரட்டில் பிறந்த தர்மேந்திராவின் மருமகள் தீப்தி, மும்பையில் கைவினை தொழில் மூலம் தன் வாழ்க்கையை தொடங்கினார். அதிர்ஷ்டம் அவருக்கு மாடலிங் வாய்ப்பை தந்து, 18 வயதில் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். அதன்பின் அவர் மாடலிங் வாழ்க்கையை தொடங்கி சிறப்பாக சென்று கொண்டிருக்க, ஒரு வருடத்தில் ஜூஹூவில் உள்ள மாதுரி தீட்சித்திடம் இருந்து தனது முதல் வீட்டை வாங்கினார்.

மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கிய தீப்தி, 1995ல் சஞ்சய் குப்தா இயக்கத்தில் ராம் சாஸ்திரா படத்தில் நடிகையாக அறிமுகமாகினார். இதன்பின் பெல்லி சண்டாடி என்ற தெலுங்கு படத்திலும் தர்ம சக்கரம் என்ற தமிழ் படத்திலும் இன்ஃபெர்னோ என்ற இந்தி படத்திலும் நடித்தார். அமீர் கான், மனிஷா கொய்ராவின் மான் படத்திலும், யே ஹை ராஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்சியிலும் கலந்து கொண்டார். பலமுறை தான் ஒரு நடிகையாக வேண்டும் என்று விரும்பவில்லை என்று தீப்தி கூறியிருக்கிறார்.
ஷாருக்கானுடன் ஒரு விளம்பரத்தில் நடித்தும் சன்னி தியோலுடன் ஒரு விளம்பர படத்திலும் நடித்தார். அப்போது தர்மேந்திராவை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க, ஆனால் அவர் மிகவும் பதட்டமாக இருந்ததால் போகாமல் இருந்திருக்கிறார். பின் விதி, ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி தர்மேந்திஆ குடும்பத்தை சேர்ந்தவரை தீப்தி மணந்தார்.

தர்மேந்திராவின் உறவினர் வீரேந்திராவின் மகன் ரன்தீப் ஆர்யாவை மணந்தார் தீப்தி. ஃபேர் & லவ்லி விளம்பரத்தில் இருவரும் நடிக்க, அந்த உறவு திருமணத்தில் முடிந்தது சுப் மற்றும் ஷிவ் என்ற இரு மகன்களை பெற்றெடுத்தனர். 2001ல் கணவருடம் சேர்ந்து ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, யூடியூப் மற்றும் சமூக ஊடங்கங்களில் ட்ராவல் வ்லாக்காராவும் திகழ்ந்து வருகிறார்.