250 கல்யாணங்களை நிறுத்தி இருக்கிறோம்.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட சூர்யா
சூர்யா
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. இந்த வருடம் சூர்யாவின் நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யாவின் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் 'கருப்பு' இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
சூர்யா தமிழ் சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஒரு ஹீரோவாக வலம் வருகிறார். அந்த வகையில், அவரது அகரம் பவுண்டேஷன் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார்.
ஓபன் டாக்
இந்நிலையில், சூர்யாவை வைத்து கோபிநாத் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் அகரம் மூலம் படித்து பட்டம் பெற்று, இன்று நல்ல நிலையில் இருக்கும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது சூர்யா ஒரு ஷாக்கிங் தகவலை பகிர்ந்தார். அதாவது, இதுவரை 250 மாணவிகளின் கல்யாணத்தை ( குழந்தை திருமணம்) நிறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.