பாலாவை பழிவாங்க இப்படியொரு பிளான் போட்ட சூர்யா! ஓடவிட்டதுக்கு இப்படியா செய்வீங்க!!
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியில் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல பேர் எடுத்தவர் இயக்குனர் பாலா. பிதாமகன், நந்தா போன்ற படங்களை வைத்து நடிகர் சூர்யாவின் ஆரம்பகால சினிமா வாழ்க்கைக்கு அடித்தளமிட்டவர் பாலா. அப்படி 18 வருட இடைவெளிக்கு பிறகு பாலாவும் சூர்யாவும் இணைந்துள்ளனர்.
சூர்யாவின் 41 வது படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் கன்னியாக்குமரியில் ஆரம்பித்தது. கிரித்தி செட்டி ஜோடியாக நடிப்பதால் படக்குழுவினர் கன்னியாக்குமரியில் செட்டமைத்து அங்கேயே தங்கியும் வந்தனர்.
ஷூட் நடந்து கொண்டிருக்கும் போது, சூர்யாவை வெயிலில் விடாமல் ஓடவிட்டதால் கடுப்பாகிய சூர்யா படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்னை வந்துவிட்டார். இதனால் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையில் பிரச்சனை படம் டிரப்பாகியது என்று கூறப்பட்டது.
ஆனால், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளீ வைக்க சூர்யா பாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு விரையில் என்று கூறி பதிவிட்டிருந்தார். முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சூர்யாவின் கண்டீஷனால் சென்னையில் வைக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தது.
இதற்கிடையில் சூர்யா, விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதன்பின் சூர்யா பாலா படத்தினை முடித்துவிட்டு வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தையுக் தொடங்கவுள்ளார் என்ற செய்தியும் வெளியானது.
ஆனால் தற்போது சூர்யா தன்னுடைய குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சுற்றுலா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
அங்கிருந்து எப்போது திரும்பவருவார் என்ற செய்தி வெளியாகவில்லையாம். இதனால் பாலா மீது இருக்கும் கோபத்தில் தான் சூர்யா நாட்களை அலைக்கழிக்கிறார் என்ற பேச்சுக்களும் கிளம்பியுள்ளது.