ரஜினியும் இல்ல, விஜய்யும் இல்ல! இந்த நடிகர் தான் ஒன்லி ஒன் சூப்பர் ஒன்-ஆம்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அவரது 169வது படமாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படம் ஷூட்டிங் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ரஜினிகாந்திற்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற போட்டி விஜய், அஜித் ரசிகர்களிடையே போரே நடந்து வருகிறது. அப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று வாரிசு ஆடியோ லான்சில் பல பிரபலங்கள் புகழ்ந்தும் வந்துள்ளனர்.
ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். இப்படியொரு நிலையில் ரஜினியும் இல்ல விஜய்யும் இல்ல என்று கூறும் வகையில் சூர்யா ரசிகர்கள் ஒரு பேனாரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
நம்பர் 1, நம்பர் 2 எல்லாம் பாப்பா விளையாட்டு ஐ ஆம் தி ஒன்லி ஒன் சூப்பர் ஒன் என்ற வார்த்தையில் ரசிகர்கள் போஸ்டரை ஒட்டியுள்ளனர். இதனை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அவரது டிவிட்டர் பக்கத்தில் ஓஹோ.. அப்படியா விசயம் என்று கூறி கலாய்த்துள்ளனர்.
ஓஹோ..அப்படியா விசயம். pic.twitter.com/SQg9HPCQDw
— Blue Sattai Maran (@tamiltalkies) January 6, 2023