வசூலில் மிரட்டும் கருப்பு திரைப்படம்.. இதுவரை உலகளவில் இத்தனை கோடியா!!

Suriya Karuppu
By Karthick Raja Jun 10, 2026 06:30 AM GMT
Report

சூர்யா நடிப்பில் கடந்த மே மாதம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் கருப்பு.

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

வசூலில் மிரட்டும் கருப்பு திரைப்படம்.. இதுவரை உலகளவில் இத்தனை கோடியா!! | Suriya Karuppu Movie Collection Report

இப்படியொரு கமர்ஷியல் மாஸ் திரைப்படத்தை தான் இவ்வளவு நாளாக எதிர்பார்த்து காத்திருந்தது போல் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். 26 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் கருப்பு திரைப்படம் ஒவ்வொரு நாளும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், 26 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 330 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.