மும்பையில் செட்டில் ஆனதுக்கு என்ன காரணம்!! ஜோதிகாவின் சீக்ரெட்டை உடைத்த நடிகர் சூர்யா..
கங்குவா
நடிகர் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கங்குவா. பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள கங்குவா படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.
படத்தின் பிரமோஷனுக்காக முதலில் பாலிவுட் பக்கம் சென்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள் படகுழுவினர். தற்போது சென்னை பக்கம் வந்துள்ள கங்குவா குழுவினர், லயோலா கல்லூரியில் ஆடியோ லான்ச்சை நடத்தியிருந்தனர். தற்போது பேட்டிகளில் கலந்து கொண்டு வரும் சூர்யா, மும்பையில் செட்டிலானது குறித்து பேசியிருக்கிறார்.
மும்பையில் செட்டில் ஏன்
சொந்த பிரச்சனை காரணமாக மும்பையில் செட்டிலாகியதாக சமுகவலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் சூர்யா செட்டிலானது குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், ஜோதிகா தன்னுடைய 18 வயது வரை மும்பையில் இருந்ததாகவும் இதையடுத்து நடிப்பு மற்றும் தனக்காக அவர் சென்னையில் செட்டிலானதாகவும் கடந்த 27 ஆண்டுகளாக தன்னுடைய பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களை பிரிந்து அவர் சென்னையில் வாழ்ந்ததாகவும் சூர்யா கூறியுள்ளார்.
தன்னுடன் நேரத்தை கழிப்பதில் அவர் சந்தோஷம் அடைந்ததாகவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிகாவின் ஆசை
ஒரு ஆணுக்கு தேவைகள், ஆசைகள் இருப்பதை போலவே பெண்ணுக்கும் இருக்கும் என்பதை புரிந்தே தான் மும்பைக்கு ஷிப்ட் ஆனேன் என்று கூறியுள்ள சூர்யா, இதை தான் தாமதமாகவே புரிந்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ஜோதிகாவிற்கு நண்பர்கள், உறவினர்கள், சுயமரியாதை, நிதி சுதந்திரம் போன்றவை தேவை என்பதை தான் புரிந்துக் கொண்டதாகவும் தற்போது தான் விரும்பிய இடத்திற்கு செல்லும் சுதந்திரம் ஜோதிகாவிற்கு உள்ளதாகவும் குழந்தைகளும் சிறப்பான கல்வியை பெற்று வருவதாகவும் சூர்யா கூறியுள்ளார்.
தான் மாதத்தில் 10 நாட்கள் மும்பையிலும் 20 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பதற்காகவும் செலவழித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் சூர்யா.
Q: Why you have moved to Mumbai❓#Suriya: Jyothika was in Mumbai for 18Years & she shifted to Chennai for me about 27 years. She sacrificed everything & came for me. Whatever a man needs a woman also needs that so again shifted to Mumbai for her & Kids❤️pic.twitter.com/jc1VeYMkT8
— AmuthaBharathi (@CinemaWithAB) October 29, 2024