ரிலீஸானது 200..இன்னும் 50 படங்கள்!! 2026-ல் ரூ. 100 கோடி வசூலித்தது 8 படங்கள்..

Suriya Tamil Cinema Karuppu Jailer 2 Scene
By Jai Nov 11, 2026 07:52 AM GMT
Report

2026 பாக்ஸ் ஆபிஸ்

தமிழ் சினிமாவில் ஓவ்வொரு ஆண்டும் பல நூறு படங்கள் ரிலீஸாகிறது. அதில் ஒருசில படங்கள் மட்டுமே வெற்றியை பெறுகிறது. அப்படி 2026ல் இதுவரை 190ஐ கடந்து 200 படங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு, சீன், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் ரிலீஸானது.

ரிலீஸானது 200..இன்னும் 50 படங்கள்!! 2026-ல் ரூ. 100 கோடி வசூலித்தது 8 படங்கள்.. | Suriyas Scene Movie Touch 100 Crore Boxoffice List

இதில் சூர்யா, நஸ்ரியா நடித்த சீன் படம் 145 கோடி ரூபாய் வசூலை கடந்தது. 2026ல் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த படங்களின் எண்ணிக்கை 7-ஐ தொட்டு 8வது படமாக மாறியது.

ரூ. 100 கோடி வசூலில் 8

இதற்கு முன் ஜெயிலர் 2, மண்டாடி, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், DC, ஜனநாயகன், கருப்பு, பராசக்தி போன்ற படங்கள் 100 கோடி வசூலை கடந்தது. இந்த லிஸ்ட்டில் சூர்யாவின் 3 படங்கள் 100 கோடியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸானது 200..இன்னும் 50 படங்கள்!! 2026-ல் ரூ. 100 கோடி வசூலித்தது 8 படங்கள்.. | Suriyas Scene Movie Touch 100 Crore Boxoffice List

ஆனால், அதில் 100 கோடி வசூலை பெறவில்லை என்றாலும், மீசைய முருக்கு 2, டோரதி, மொத ராத்திரி, கட்டா குஸ்தி 2, பிளாஸ்ட், தாய் கிழவி, வித் லவ், தலைவர் தம்பி தலைமையில் உள்ளிட்ட படங்கள் நல்ல வசூலை பெற்று வெற்றி படங்கள் லிஸ்ட்டில் இணைந்தது.

ரிலீஸானது 200..இன்னும் 50 படங்கள்!! 2026-ல் ரூ. 100 கோடி வசூலித்தது 8 படங்கள்.. | Suriyas Scene Movie Touch 100 Crore Boxoffice List

ஜெயிலர் 2 ரூ. 850

இந்த ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் பட லிஸ்ட்டில் ஜெயிலர் 2 ரூ. 850 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. எஞ்சியுள்ள 7 வெள்ளிக்கிழமைகளில் இன்னும் சுமார் 50 படங்கள் ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கையில் அவற்றில் எந்த படங்கள் 100 கோடி வசூல் படமாக மாறும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.