சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொள்ளவில்லை.. கொலை தான் செய்யப்பட்டுள்ளார், அதிர்ச்சியளிக்கும் தகவல்
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங். இவர் நடித்து வெளிவந்த தோனியின் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது. இப்படம் தான் இவரை இந்தியளவில் பிரபலமாக்கியது.
கடந்த 2020 ஜூன் மாதம் 14ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மரணத்தில் சந்தேகம் எழுந்த நிலையில், அது பற்றி காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் அது தற்கொலை தான் என தெரிவித்தனர்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் திடீரென அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இது தற்கொலை இல்லை கொலை என தெரியவந்துள்ளது. சுஷாந்த் சிங்கின் உடலை ப்ரேதே பரிசோதனை செய்த ஷா என்ற ஒரு ஊழியர் தற்போது அளித்திருக்கும் ஒரு பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
"சுஷாந்த் உடலை முதலில் பார்க்கும்போதே அது தற்கொலை இல்லை கொலை என தெரிந்துவிட்டது. அவர் உடல் மற்றும் கழுத்தில் சில மார்க்குகள் இருந்தன. இது பற்றி அதிகாரிகளிடம் சொன்ன போது அவர்கள் என்னை ரூல்ஸ் படி வேலை செய்ய சொன்னார்கள். வீடியோ பதிவு செய்யாமல் போட்டோ மட்டும் எடுத்துவிட்டு உடலை போலீசிடம் ஒப்படைக்க சொன்னார்கள். அவர்கள் சொன்னபடி செய்துவிட்டோம் " என ஊழியர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.