2 பெண் குழந்தைகள் இருக்கும் போது முதல் திருமணமா? 46 வயதில் சுஷ்மிதா எடுத்த அதிரடி முடிவு..
மாடலிங் துறையில் பட்டத்தை வென்று சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை சுஷ்மிதா சென். மிஸ் யூனிவர் பட்டத்தை 1994ல் வென்று டஸ்டக் என்ற பாலிவுட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.
இதனையடுத்து இயக்குனர் பிரவீன் காந்தி இயக்கத்தில் 1997ல் நாகர்ஜுனா நடிப்பில் வெளியான ரட்சகன் படத்தில் தமிழில் அறிமுகமாகினார். அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பு பாலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதனையடுத்து முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி பாடலுக்கு ஆட்டம் போட்டார்.
பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த சுஷ்மிதா சென் மார்க்கெட் இழந்து ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட ஆரம்பித்தார். திருமணம் செய்யாமல் இருந்த சுஷ்மிதா சென் இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து பாசத்துடன் வளர்த்து வந்தார்.
இதனையடுத்து 2018 ஆம் ஆண்டு ரோமன் சாவல் என்ற 10 வயது குறைவான நடிகருடன் தொடர்பில் இருந்து வந்தார். இதன்பின் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு பிரிந்துவிட்டதாக சுஷ்மிதா சென் தெரிவித்தார்.
இந்நிலையில் 46 வயதான நடிகை சுஷ்மிதா சென் 56 வயதான முன்னாள் ஐபிஎல் போட்டியின் தலைவர் லலித் மோடியுடன் டேட்டிங் சென்றுள்ளாராம். பல வருடங்களுக்கு முன் இருவருக்கும் ரகசிய உறவு இருப்பதாக செய்திகளும் ரகசிய புகைப்படங்களும் வெளியானது.
அவர்கள் இருவரும் திருமணம் செய்யப்போவதாக இல்லை. தற்போதைக்கு டேட்டிங் என்றும் கடவுள் ஆசிர்வாதம் இருந்தால் அது நடக்கும் போது நானே தெரிவிக்கிறேன் என்றும் லலித் மோடி கூறியுள்ளார்.
தற்போது சுஷ்மிதா சென்னுடன் எடுத்த நெருக்கமான புகைப்படங்களையும், தற்போது டேட்டிங்கிற்காக சென்றுள்ள மாலத்தீவு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.