நடிகையுடன் திருமணம் வரை சென்ற விஜயகாந்த்!! தடுத்து நிறுத்திய நண்பர்!! சீக்ரெட் சொன்ன தயாரிப்பாளர்..
கேப்டன் விஜயகாந்த்
மறைந்த கேப்டன் விஜயகாந்த் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கான ஒரு தனி இடத்தை மக்கள் மத்தியில் பிடித்தார். நடிகர் சங்க தலைவராக இருக்கும் போது பல சிக்கல்களை தீர்த்து வைத்தவர் அரசியலில் மட்டும் சறுக்கிவிட்டார்.
அதிலும் எதிர்கட்சியாக இருந்தபோது ஜெயலலிதாவை பகைத்துக்கொண்டது கேப்டனுக்கு அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுத ஆரம்பித்தது. கூட இருந்த எம் எல் ஏக்கள் விலக, கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பித்தார்.

ஒருக்கட்டத்தில் உடல் நிலை மோசமாக அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றும் பின் ஓய்வு எடுத்து வந்தவர் கடந்த 2023ல் உயிரிழந்தார். அவரின் மரணத்திற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடே கண்ணீர் சிந்தியது.
நடிகையுடன் திருமணம்
இந்நிலையில், தயாரிப்பாளர் டி சிவா அளித்த பேட்டியொன்றில் கேப்டன் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், விஜயகாந்துக்கு பெரியபெரிய தொழிலதிபர்கள், பெரிய ஆட்கள் எல்லாம் தங்கள் பெண்ணை கட்டிக்கொடுக்க தயாராக இருந்தார்கள். அதுமட்டுமின்றின் என்ன வேண்டுமானாலும் செய்ய தயார் என்றும் கூறினார்கள்.

மேலும் ஒரு நடிகையுடன் அவருக்கு திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான ராவுத்தார், அந்த திருமணத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
தன் நண்பர் ராவுத்தர் சொன்னதையடுத்து எனக்கு உன்னைவிட யாரும் நல்லது யோசிக்கமாட்டார்கள் என்று சொல்லிவிட்டு அந்த திருமணத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று தயாரிப்பாளர் டி சிவா தெரிவித்துள்ளார்.
யார் அந்த நடிகை என்று அவர் குறிப்பிடவில்லை. ஆனால் நடிகை ராதிகாவைத்தான் விஜயகாந்த் திருமணம் செய்யவிருந்தார் என்று மூத்த சினிமா பத்திரிக்கையாளர்கள் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.