ஒரே ஒரு படம் நடித்த 51 வயது நடிகருக்கு ஜோடியாகும் தமன்னா.. யார் அந்த நடிகர் தெரியுமா

Tamannaah Saravanan Arul
By Kathick May 31, 2022 02:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. சமீபத்தில் லெஜண்ட் சரவணன் அருள் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் தமன்னா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இது மட்டுமின்றி சரவணன் அருளுடன் நடிகை தமன்னா சில விளம்பரங்களிலும் இணைந்து நடித்திருக்கிறார். இந்நிலையில், நடிகை தமன்னாவிடம், " நீங்கள் சரவணன் அருளுக்கு ஜோடியாக இணைந்து நடிப்பீர்களா " என்று கேள்வி கேட்டகப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த தமன்னா "சரவணன் அருளுடன் நடிக்கும் படத்தின் கதையும், எனக்கான கதாபாத்திரமும் பிடித்திருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் " என்று கூறியுள்ளார். சரவணன் அருள் தனது 51வது வயதில் தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.