30 - 35 வயதிக்குள் திருமணத்தை முடித்த டாப் நடிகைகள் யார் யார் தெரியுமா?
30 - 35 வயதிக்குள் திருமணம்
சினிமாவில் நடிகைகள் பலர் உச்சத்தில் இருக்கும்போதே 30 - 35 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வார்கள். அதன்பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தியும் வருவார்கள். அப்படி 30 - 35 வயதிற்குள் திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் யார் என்பதை பார்ப்போம்...

2024 டிசம்பர் மாதம் தன்னுடைய 15 ஆண்டுகால காதலரை 32 வயதில் திருமணம் செய்து கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
நடிகை சமீரா ரெட்டி, தன்னுடைய 35 வயதில் தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ஸ்ரேயா சரண், 2018ல் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய 35 வயதில் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய 35 வயதில் தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

31 வயதில் நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தன்னுடைய 33 வயதில் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை அசின் 2016ல் தன்னுடைய 30வது வயதில் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.