ஹிட் பாடல்களை பாடிய பாடகர்..இன்று பேசக்கூட முடியாத சூழ்நிலை!! KPY பாலா வெளியிட்ட வீடியோ..

Anirudh Ravichander Harris Jayaraj KPY Bala Tamil Singers
By Edward Apr 15, 2026 04:15 PM GMT
Report

KPY பாலா

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான KPY பாலா, சமீபகாலமாக, கஷ்டப்படுவர்களுக்கு செய்யும் உதவி பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தன்னால் முடிந்த உதவிகளை செய்து அதனை சோசியல் மீடியாத் தளங்களில் வெளியிட்டும் வருகிறார்.

ஹிட் பாடல்களை பாடிய பாடகர்..இன்று பேசக்கூட முடியாத சூழ்நிலை!! KPY பாலா வெளியிட்ட வீடியோ.. | Tamil Singer Struggle To Speak Kpy Bala Video Post

அப்படி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதாவது அவர் உதவி செய்த நபர் ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் இசையில் பாடல்கள் பாடிய பாடகர் தான்.

ஹிட் பாடல்களை பாடிய பாடகர்..இன்று பேசக்கூட முடியாத சூழ்நிலை!! KPY பாலா வெளியிட்ட வீடியோ.. | Tamil Singer Struggle To Speak Kpy Bala Video Post

ரிச்சர்ட் ஆலிசன் நாதன்

ஹாரிஸ் ஜெயராஜின் எங்கேயும் எப்போதும் படத்தில் இடம்பெற்ற ’நங்கை’ என்ற பாடலையும், நண்பேன்டா படத்தின் நீ சன்னோ நியூ மூனோ என்ற பாடலையும், அனிருத்தின் ரெமோ படத்தில் இடம்பிடித்த மீசை பியூட்டி பாடலையும் பாடி கவர்ந்த பாடகர் ரிச்சர்ட் ஆலிசன் நாதன் தான்.

ஹிட் பாடல்களை பாடிய பாடகர்..இன்று பேசக்கூட முடியாத சூழ்நிலை!! KPY பாலா வெளியிட்ட வீடியோ.. | Tamil Singer Struggle To Speak Kpy Bala Video Post

பல நல்ல பாடல்களை பாடிய திறமையான குரலுக்கு சொந்தக்காரர் ரிச்சர்ட், தற்போது பக்கவாதம் ஏற்பட்டு ஒரு கை மற்றும் வாயில் பாதிப்பு ஏற்பட்டு பேசமுடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளார்.

ஹிட் பாடல்களை பாடிய பாடகர்..இன்று பேசக்கூட முடியாத சூழ்நிலை!! KPY பாலா வெளியிட்ட வீடியோ.. | Tamil Singer Struggle To Speak Kpy Bala Video Post

அவரின் இந்த நிலையை அறிந்த பாலா, அவர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, ரூ. 50 ஆயிரம் தொகையை கொடுத்துள்ளார். நீங்கள் பழையை நிலைக்கு வரவேண்டும் என்றும் அதற்கான உதவிகளை செய்வேன் என்றும் கூறியிருக்கிறார் கேபிஒய் பாலா.