விஜய்யா வேண்டவே வேண்டாம்? 12 வருடங்களாக தளபதி பக்கமே போகாத நடிகை தமனனா!
தமிழ் சினிமாவில் கேடி, வியாபாரி போன்ற படங்கள் மூலம் அறிமுகமாகியவர் நடிகை தமன்னா. மும்பை மாடலாக இருந்து இந்தி, தெலுங்கு, தமிழ் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்து நல்ல வரவேற்பு பெற்ற படம் படிக்காதவன்.
தனுஷுக்கு ஜோடியாக நடித்தபின் அயன், பையா, சுறா, தில்லாலங்கடி, வீரம், நண்பேண்டா போன்ற படங்களில் நடித்து வந்தார். மிகப்பெரிய ஹிட் கொடுத்த படமான பாகுபலி படத்தில் அவந்திகா கதாபாத்திரத்தில் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகினார்.
தற்போது பாலிவுட், வெப் தொடர் என பிஸியாக இருந்து வரும் தமன்னா விஷாலின் அக்க்ஷன் படத்திற்கு பிறகு எந்த தமிழ் படத்திலும் கமிட்டாகவில்லை.
இந்நிலையில் நடிகர் விஜய்யுடன் நடிக்க பல முன்னணி நடிகர்கள் போட்டிப்போடும் போது தமன்னா அவர் பக்கமே வரமாட்டேன் என்ற வைராக்யத்தில் இருந்துள்ளார்.
அதற்கு காரணம் சுறா படத்தின் படுதோல்வியாலும் அதைவைத்து கிண்டலுக்கு ஆளாகியதும் தான் காரணம் என்கிறார்கள் கோல்வுட் வட்டாரத்தில். தற்போது தளபதி விஜய்யின் 66 படத்தில் தமன்னா நடிக்கவுள்ளார் என்ற தகவல் கசிய ஆரம்பித்துள்ளது.
தெலுங்கு, தமிழில் மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்தில் தமன்னா நடிப்பாரா இல்லை வேறொருவர் கமிட் செய்யப்படுவாரா என்று படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தில் தான் தெரியவரும்.