விஜய் அரசியல் சுற்றுப்பயணத்தில் அஜித் ரசிகர்கள் செய்த செயல்
விஜய் அரசியல் பரப்புரை
நடிகர் விஜய் தன்னுடைய கட்சியில் அரசியல் பரப்புரைக்காக, உங்க விஜய் நா வரேன்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். விக்கிரவாண்டி மாநாட்டில், திமுக மற்றும் பாஜக கட்சிகளை விமர்சித்து பேசியது தமிழ்நாடு முழுவதிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திமுகவை தொடர்ந்து விஜய் விமர்சிப்பதை பார்த்த திமுகவினர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல விஷயங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
திருச்சியில் ஆரம்பித்த சுற்றுப்பயணம் தற்போது நாமக்கல் மாவட்டத்திலும் தொடர்கிறது. காலையிலேயே பரப்புரை பேருந்தில் ஏறிய விஜய், பல நேரம் கழித்து தான் தன்னுடைய பேச்சை தொடங்கினார்.
ராஜாவின் பார்வையிலே
கட்டுக்கடங்காத கூட்டத்தால் அந்த இடமே தொண்டர்கள் ரசிகர்களின் ஆரவாரத்தால் திகைத்தது. இந்நிலையில் விஜய் பரப்புரை பேருந்தில் இருந்தபோது அவரும், அஜித்தும் நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தின் ஃபோட்டோ ஒன்றை ப்ரேம் செய்து தொண்டர் ஒருவர் விஜய்யிடம் கொடுத்துள்ளார்.
அதில், பிரியமுடன் விஜய் என்று கையெழுத்திட்டு அந்த ப்ரேமை கொடுத்துள்ளார் விஜய். இதை பார்த்த ரசிகர்கள் அட விஜய்யின் பரப்புரை பயணத்தில் அஜித்தும் இருக்கிறாரே என்ற கருத்துக்களை பதிவிட்டு பகிரப்பட்டு வரும் வீடியோவை ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
#Thalapathy autographing the Vijay–AK photo frame 🤍 👌🏻pic.twitter.com/mVgQDrchIH
— Ayyappan (@Ayyappan_1504) September 27, 2025