வாரிசு’ விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடி தானா?

Vijay Varisu
1 வாரம் முன்
Edward

Edward

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தன் தந்தையால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் விஜய். தன் தந்தை இயக்கத்தால் 7 படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார் விஜய். பல தோல்விகள் கண்டாலும் அதிலிருந்து விடுபட்டு அடுத்தடுத்த வெற்றிக்காக உழைத்தவர் விஜய்.

தளபதி 66 டூ வாரிசு 

நேற்று விஜய் அவரது 48வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு போஸ்டர்கள் அடித்து இணையத்தில் வாழ்த்துக்களை கூறியும் வந்தனர். பீஸ்ட் படத்தினை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜ் தயாரிப்பில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

வாரிசு’ விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடி தானா? | Thalapathy Vijay Net Worth After Beast Movie

பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தின் டைட்டிலுடன் போஸ்டர்கள் விஜய் பிறந்த நாள் ட்ரீட்டாக படக்குழு வெளியிட்டனர். வாரிசு என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின் விஜய் லுக் பிரம்மாண்டமாக இருந்துள்ளது. மூன்று புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

சொத்து மதிப்பு

விஜய் இப்படத்திற்காக சுமார் 118 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறாராம். பீஸ்ட் படத்தில் இதைவிட கம்மியாக இருந்தாலும் விஜய்யின் ஆண்டு வருமான 100 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஜய்யின் கடந்த ஆண்டு சொத்துமதிப்பு சுமார் 410 கோடியாக இருந்தது. பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய்யின் தற்போதைய சொத்து மதிப்பு 500க்கும் மேல் என்று கூறப்படுகிறது. 

கார் மற்றும் பைக்

விஜய்யிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார், ரூ. 1.30 கோடி மதிப்பிலான ஆடி A8, ரூ.75 லட்சம் மதிப்புள்ள BMW series 5, ரூ. 90 லட்சம் மதிப்புள்ள BMW X6, ரூ. 35 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் உள்ளிட்ட கார்கள் விலையுயர்ந்த பைக், சைக்கிள்கள் வைத்திருக்கிறாராம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.