அப்பா பெயரை காப்பாத்த முடியலையா!! மனோஜ் பாரதிராஜா பற்றி எமோஷ்னலாக பேசிய நடிகர்..
பாரதிராஜாவின் மகன் மனோஜ்
தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் என்று அனைவராலும் புகழப்பட்டு வரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்றிரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தந்தை பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் மனோஜ். இதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த மனோஜ், சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகினார்.
அதன்பின் ஈஸ்வரன், மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். மனோஜ் கடைசியாக மார்கழி திங்கள் என்ற படத்தினை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 25 ஆம் தேதி இரவு மாரடைப்பால் மனோஜ் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த தென்னிந்திய சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் நீலாங்கரை பகுதியில் இருக்கும் அவர் வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தம்பி ராமையா
இந்நிலையில், நடிகர் தம்பி ராமையா மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிக்கையாளர்கலை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது பெரிய மனிதர்களுக்கு பிள்ளையாக பிறப்பது ரொம்பவே கஷ்டமான ஒன்று. அப்பா பெயரை காப்பாற்றவில்லையா? அடுத்து என்ன செய்யப்போறீங்க என்று ஏராளமானோர் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.
அப்படித்தான் மனோஜுக்கும் இந்த மன அழுத்தம் வந்திருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. பெரிய மனிதர்களுக்கு பிள்ளையாக பிறந்து தந்தையின் பெயரை, மானத்தை காப்பாற்ற முடியவில்லை என்றால் அவர்களால் சராசரியாக அனைவரிடமும் பேசிவிட முடியாது, வீட்டில் கதவை சாத்திக்கொண்டு இருப்பார்கள்.
அதுதான் அவருக்கு வந்த மன அழுத்தமும் 48 வயதில் இந்த மரணமும் என்று நினைக்கிறேன். பாரதிராஜா எல்லோருக்குமான பிதாமகன், அவரை இப்படியெல்லாம் எங்களால் காணவே முடியவில்லை என்று தம்பி ராமையா எமோஷ்னலாக பேசியுள்ளார்.