ஒரேவொரு போஸ்ட் இத்தனை கோடி சம்பளமா!! இன்ஸ்டாகிராமில் கோடிக்கணக்கில் புரளும் பிரபலங்கள்..
இன்ஸ்டாகிராம் போஸ்ட்
சமூகவலைத்தளங்களின் பயன்பாடுகள் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை போல் அதைவைத்து காசு சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
அந்தவகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட லட்சம் முதல் கோடிக்கணக்கில் பிரபலங்கள் உள்ளிட்ட இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸ் சம்பாதித்து வருகிறார்கள். அப்படி பிரபலங்கள் ஒரு இன்ஸ்டா பதிவு மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று பார்ப்போம்..
இத்தனை கோடி சம்பளமா
294 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ள பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் ஒரு பதிவிற்கு 1.76 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுகிறாராம்.
303 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ள பிரபல நடிகை க்ளோ கர்தாஷியன் ஒரு பதிவிற்கு 1.87 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுகிறார்.
312 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ள பாடகியும் நடிகையுமான Beyoncé, ஒரு பதிவிற்கு 1.89 அமெரிக்க டாலரை பெற்று வருகிறார்.
357 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்றுள்ள, பிரபல கவர்ச்சி நடிகை கிம் கர்தாஷியன் ஒரு பதிவிற்கு 2.17 மில்லியன் அமெரிக்க டாலரை பெற்று வருகிறார்.
376 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ள பாப் பாடகி அரியானா கிராண்டே 2.26 மில்லியன் அமெரிக்க டாலரை சம்பளமாக பெறுகிறார்.
394 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ள ராக் என்கிற டுவைன் ஜான்சன், ஒரு இன்ஸ்டா பதிவிற்காக 2.32 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்று வருகிறார்.
421 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ள சமூக ஆர்வலர் கைலி ஜென்னர், 2.38 மில்லியன் டாலரை ஒரு பதிவில் சம்பாதிக்கிறார்.
421 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ள செலினா கோம்ஸ், ஒரு பதிவிற்கு 2.55 மில்லியன் டாலர் பெற்று வருகிறார்.
505 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ள கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 2.59 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பளமாக பெற்று வருகிறார்.
651 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஒரு பதிவிர்கு சுமார் 3.23 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சம்பளமாக பெறுகிறார்.