விஜய் டிவி சீரியலை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்! இந்த ஒரு காட்சி போதுமே

Thendral Vanthu Ennai Thodum
By Parthiban.A Feb 20, 2022 06:29 PM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு அதிகம் அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே போல ஜவ்வாக இழுக்கும் பல சீரியல்களை திட்டி தீர்க்கும் கூட்டமும் இருக்கிறது. தற்போது அப்படி பாரதி கண்ணம்மா தொடரை எப்ப தான் முடிப்பீங்க என கேட்டு வருகின்றனர்.

அது ஒருபுறம் இருக்க தென்றல் வந்து என்னை தொடும் என்ற தொடரை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அதில் ஹீரோயினை ரௌடிகள் கடத்தி கொண்டு சென்று வைத்திருக்க ஹீரோ அங்கு வந்து 'இப்ப நான் என்ன செய்ய' என சினிமா ஹீரோ போல பன்ச் டைலாக் பேசுகிறார்.

அதன் பிறகு ஹீரோயின் சொன்ன பிறகு தான் அவர் சண்டையை தொடங்குகிறார். அதன் பின் அவர்கள் காட்டுக்குள் சென்று ஒளிந்துகொள்கின்றனர். அப்போது ஹீரோ ரௌடி குத்த வரும் கத்தியை கையாலேயே பிடித்து கொள்கிறார்.

என்னடா இதெல்லாம்..சினிமாவில் பார்த்து சலித்துபோன காட்சிகள் எல்லாம் இப்போது சீரியல்களிலும் வர தொடங்கிவிட்டது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.