RJ பாலாஜி காரில் கண்ணீர்விட்டாரே தவிர..சூர்யாதான்!! கருப்பு பற்றி பிரபல தியேட்டர் உரிமையாளர் ஓபன்
கருப்பு
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி, மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம் கருப்பு. கடந்த மே 15ஆம் தேதி வெளியான இப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது.
கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், வசூலில் வேட்டையாடி வருகிறது கருப்பு. இந்த நிலையில், கருப்பு திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் மூலம் ரூ. 80 கோடி லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கருப்பு படம் வெளியாகும் பிரச்சனையில் ஆர்ஜே பாலாஜி அழுதது குறித்து திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார்.
RJ பாலாஜி
அதில், கடந்த தீபாவளிக்கு வர வேண்டிய படம் தான் கருப்பு, ஆனால் 8 மாதங்கள் தாமதமாக வெளியாகியது. ஆர்ஜே பாலாஜி காருக்குள் கதறி அழுகிறாரே தவிர, பணம் கொடுத்து உதவவில்லை. தயாரிப்பாளரிடம் 30 கோடி ரூபாய் பட்ஜெட் என்று கூறி படத்தை தொடங்குகிறார்கள்.

ஆனால் இறுதியில் ரூ. 80 கோடி
வரை செலவாகிறது. படம் ரிலீஸாகும் 3 நாட்களுக்கு
முன்வரை படக்குழு எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பது
எங்களுக்குத்தான் தெரியும். சூர்யாவை தவிர வேறு
யாரும் உதவி செய்யவில்லை என்று திருப்பூர்
சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.