இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்கு குட்பை சொல்லும் போட்டியாளர்.. அட இவரா

Vijay Sethupathi TV Program Bigg Boss Tamil 8
By Bhavya Dec 27, 2024 02:30 PM GMT
Report

 பிக் பாஸ்

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக சந்தோஷத்தின் உச்சத்தில் பிக்பாஸ் 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

அதற்கு முக்கிய காரணம் என்ன என்பது அனைவருக்குமே தெரியும், Freeze Task நடைபெற்று வருவதால் தான். தினமும் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுத்துவிட்டு செல்கின்றனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்கு குட்பை சொல்லும் போட்டியாளர்.. அட இவரா | This Week Elimination From Bigg Boss

உறவினர்கள் வந்து போன நிலையில் இன்றைய எபிசோடில் பவித்ராவின் தோழி சமந்தாவும், விஜே விஷாலின் தோழி நேஹாவும் வீட்டிற்கு வருகிறார்கள்.

இந்த வாரம் எலிமினேஷனுக்காக நடந்த நாமினேஷனில் அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், ராணவ், மஞ்சரி, ஜெஃப்ரி, விஷால் என 7 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.

இவர்களுக்கு கிடைத்த ஓட்டிங் விவரங்களை வைத்து பார்க்கும் போது விஷால், ஜெஃப்ரி மற்றும் அன்ஷிதா ஆகியோர் டேஞ்சர் ஜோனில் உள்ளதாக தெரிகிறது.

அட இவரா 

இந்த 3 பேரில் அன்ஷிதா தான் குறைவான வாக்குகள் பெற்று உள்ளாராம். இதனால், அன்ஷிதா இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்கு குட்பை சொல்லும் போட்டியாளர்.. அட இவரா | This Week Elimination From Bigg Boss