இந்த விசயத்தில் அஜித் கில்லி!! விஜய் மாமனார் வீட்டு ஏரியாவில் பட்டையை கிளப்பும் துணிவு!!

Ajith Kumar Thunivu
By Edward Jan 19, 2023 06:22 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் எப்போது இரு நடிகர்கள் போட்டியாளர்களாக திகழ்ந்து வருவார்கள். அப்படி கமல், ரஜினிக்கு பின் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு துருவ நட்சத்திரங்களாக இருந்து வருகிறார்கள் அஜித், விஜய்.

அந்தவகையில் இருவரின் நடிப்பில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு 14 ஆண்டுகளுக்குப்பின் பொங்கலன்று மோதியது. இரு படக்குழுவினரும் படம் வெளியானது முதல் இன்று வரை விமர்சனம் மற்றும் வசூலால் சந்தோஷத்தில் பூரிப்படைந்து வருகிறார்கள்.

ஆனால் விஜய்யின் வாரிசு உலகம் முழுவதும் 210 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறார்கள். அதேபோல் துணிவும் 150 கோடியை தாண்டி வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அஜித்தை விட விஜய்யின் மார்க்கெட் எப்போது இங்கிலாந்தில் அதிகமாக கிடைக்கும். அப்படி விஜய் 7 லட்சம் பவுண்டு-க்கும் மேல் வசூலித்து இருந்தாலும் அஜித்தின் துணிவு முதன்முறையாக இங்கிலாந்தில் 3லட்சம் பவுண்டு வசூல் செய்து புதிய சாதனையை பிடித்து தன் கொடியை ஏற்றியிருக்கிறார்.

விஜய்யின் கோட்டையாக இருக்கும் இங்கிலாந்து பகுதியில் அஜித் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் அமெரிக்கா, பிரான்ஸ், அரபு நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் துணிவு வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

GalleryGallery