தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டதா துணிவு.. போனி மாம்ஸ் நிலை என்ன
அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இவரை ரசிகர்கள் செல்லமாக போனி மாம்ஸ் என்று சமூக வலைத்தளத்தில் அழைப்பார்கள்.
வருகிற பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், துணிவு படத்தின் பிசினஸ் குறித்து ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதன்முலம் இப்படத்தால் தயாரிப்பாளர் போனி கபூருக்கு லாபம் கிடைத்துள்ளது இல்லை தலையில் துண்டு விழுந்ததா வாங்க பார்க்கலாம்.
துணிவு படத்தின் பட்ஜெட் - ரூ. 160 கோடி
அஜித் சம்பளம் - ரூ. 70 கோடி
தமிழ்நாடு உரிமை - ரூ. 60 கோடி
கேரளா உரிமை - ரூ. 2.50 கோடி
கர்நாடகா உரிமை - ரூ. 3.50 கோடி
ஆந்திரா - தெலுங்கானா உரிமை - ரூ. 1.50 கோடி
ஹிந்தி டப்பிங் உரிமை - ரூ. 25 கோடி
வெளிநாட்டு உரிமை - ரூ. 14 கோடி
ஆடியோ உரிமை - ரூ. 2 கோடி
நெட்ஃபிலிஸ் டிஜிட்டல் உரிமை - ரூ. 65 கோடி
கலைஞர் டிவி சாட்டிலைட் உரிமை - ரூ. 20 கோடி
முழுமையாக துணிவு படத்தின் வியாபாரம் மட்டும் - ரூ. 193.60 கோடி
இதனை வைத்து பார்க்கும் பொழுது இன்றைய தேதியில் துணிவு படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ள லாபம் - ரூ. 33.60 கோடி. இந்த முறை தயாரிப்பாளர் தலையில் துண்டு விழாமல் காப்பாற்றிவிட்டார் அஜித்.