லியோ லிப் லாக் சீனும், விவாகரத்து சண்டையும்!! TN 2026 படத்தின் குசும்புத்தனம்..
TN 2026
தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் நடிகர் நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த 10 ஆம்தேதி ரிலீஸான படம் தான் TN 2026.
இப்படம் ரிலீஸாகி 3 நாட்களாகிய நிலையி இதுவரை 1.5 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. கலவையான விமர்சனத்தை பெற்று வரும் இப்படத்தில் விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களை நய்யாண்டி செய்து உருவாக்கப்பட்டதாகவே இருப்பதாக படத்தை பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

சில இடங்களில் மட்டும் விஜய்க்கு மாஸ் பில்டப் கொடுத்துவிட்டு குறிப்பாக பர்சனல் மேட்டரில் அதிகப்படியாக அசிங்கப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். ஆனால் படத்துக்கு விஜய் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பவே அவரச அவசரமாக பிரஸ் மீட் எல்லாம் வைத்து உமாபதியும் ராமையாகவும் விளக்கம் கொடுத்தனர்.
லியோ லிப் லாக் சீனும்
படத்தில், ஸ்க்ரிப்ட் படிக்கும்போது காரைக்குடியில் ஷூட்டிங் என்று இருந்தது, எப்படி காஷ்மீருக்கு மாறியது என்று நட்டி நட்ராஜின் மனைவி கேட்பது போலவும், நடிகையுடன் லிப் லாக் சீன் வேற கேக்குதோ என அவர் கணவரிடம் சண்டையிடும் காட்சியை அப்படியே வைத்துள்ளனர்.

லியோ படத்தில் காஷ்மீரில் படமாக்கப்பட்டது என்பதும், அப்படத்தில் விஜய் - திரிஷா லிப் லாக் காட்சி இடம்பெற்றதும் அனைவரும் அறிந்தது. அதைத்தான் அப்படியே வைத்து அசிங்கப்படுத்தியுள்ளனர் என்று தியேட்டர் கிளிப்பிங்க்ஸை நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.