ஸ்பைடர்மேன் பட ஹீரோவுக்கு தலையில் காயம்.. மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கப்படும் கதாபாத்திரம் ஸ்பைடர்மேன். மார்வெல் திரைப்படங்களில் அவெஞ்சர்ஸ் படங்களுக்கு அடுத்த அதிக வசூல் என்றால், அது ஸ்பைடர்மேன் படத்திற்குத்தான்.
அந்த அளவிற்கு ரசிகர்களிடையே ஆதரவை பெற்றுள்ளது. தற்போது மிகவும் பிரம்மாண்டமாக ஸ்பைடர்மேன்: Brand New Day படம் உருவாகி வருகிறது. டெஸ்டின் டேனியல் இயக்கிவரும் இப்படத்தில் டாம் ஹாலண்ட் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஹீரோவுக்கு காயம் ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதில் நடித்து வந்த நடிகர் டாம் ஹாலண்ட் விபத்தில் சிக்கியுள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் டாம் ஹாலண்டுக்கு, லேசான மூளை அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் முழுமையாக குணமடைந்து படப்பிடிப்புக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.