திரிஷா பெண் சிங்கம் தான்.. துணை முதலமைச்சர் ஆனா என்ன தப்பு!! ரசிகை கொடுத்த ஆதரவு..

Trisha Chief Minister of Tamil Nadu Tamil Actress
By Jai Aug 18, 2026 09:00 AM GMT
Report

திரிஷா

இந்தியாவின் 80வது சுதந்திர நாள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தேசிய கொடியை ஏற்றி தன்னுடைய உரையை பேசியிருந்தார்.

இந்நிகழ்ச்சியில் நடிகை திரிஷாவும் அவரது அம்மாவும் கலந்து கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது. முதலமைச்சர் விஜய்யின் பதவி ஏற்பு விழா முதல் சுதந்திர தின நிகழ்ச்சி வரை திரிஷா கலந்து கொண்டது பெரியளவில் பேசப்பட்டது.

திரிஷா பெண் சிங்கம் தான்.. துணை முதலமைச்சர் ஆனா என்ன தப்பு!! ரசிகை கொடுத்த ஆதரவு.. | Trisha For Deputy Cm Senior Woman Fan Openup

இந்நிலையில், திரிஷா துணை முதலமைச்சரானால் உங்களுக்கு ஓகேவா என்ற கேள்விக்கு ரசிகை ஒருவர் பதிலளித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அந்த ரசிகை, செல்வி ஜெயலலிதா அம்மா எவ்வளவோ போராட்டங்களுக்கு மத்தியில் முதலமைச்சர் ஆனார். அவர் நடிகையாகவும் இருந்தார், மிகச்சிறந்த அறிவாளி. அவரை முந்துவதற்கு எந்த ஆணாலும் முடியவில்லை.

எங்கிருந்து கேள்வி வந்தாலும் சரி, அவர் அனைத்துக்கும் பதில் சொல்வார். அவர் இருந்தவரை பெண் சிங்கம் மாதிரி இருந்தார். அவர் மாதிரி திரிஷாவால் மாற முடியாதா?

திரிஷா பெண் சிங்கம் தான்.. துணை முதலமைச்சர் ஆனா என்ன தப்பு!! ரசிகை கொடுத்த ஆதரவு.. | Trisha For Deputy Cm Senior Woman Fan Openup

என்ன தப்பு

இந்த சினிமாத்துறையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இருக்கிறார், எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்திருந்தால் அத்தனை பிரச்சனைகளையும் சமாளித்து இருப்பார். ஏன் அவர் வரக்கூடாது, கண்டிப்பாக வருவார். அவரை ஏன் தேர்தலில் நிற்க வைக்கக்கூடாது.

துணை முதலமைச்சராக மட்டுமல்ல, அதற்கும் மேல் ஒரு பதவி இருந்தாலும் அவர் பொருந்துவார். அறிவாளி, தைரியமான பெண், கிட்டத்தட்ட பெண் சிங்கம் தான். அவர் கண்டிப்பாக வெல்வார். பெண்கள் அனைவருமே அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.