விஜய்யா? அஜித்தா? திரிஷா அதிக மார்க் யாருக்கு கொடுத்திருக்காங்க தெரியுமா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா ஆரம்பத்தில் இருந்தே முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு டாப் இடத்தினை பிடித்தார்.
விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த திரிஷா இடையில் பல சிக்கல்களை சந்தித்து மார்க்கெட் இழந்தார்.

அதன்பின் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய இடத்தினை கொடுத்தப்பின் லியோ, விடாமுயற்சி, தக் லைஃப், விஷ்வரம்பா உள்ளிட்ட அதிக மார்க்கெட் உள்ள படங்களில் கமிட்டாகினார்.
சமீபத்தில் கூட விஜய்யின் கோட் படத்தில் மட்ட என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
விஜய்க்காக பல விஷயங்கள் செய்து வரும் திரிஷா, சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எந்த ஸ்டாருக்கு 100க்கு இவ்வளவு மதிப்பெண் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு விஜய்க்கு 20 மதிப்பெண், அஜித்துக்கு 80 மதிப்பெண் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது டிரெண்ட்டாகி வருகிறது.