அதை பார்த்து மயங்கும் அப்படிப்பட்ட பையன் தேவையா!! நடிகை திரிஷா கொடுத்த ஷாக்..
தமிழ் சினிமாவில் ஜோடி படத்தின் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து மெளனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய கரியரை ஆரம்பித்தவர் நடிகை திரிஷா. முன்னணி நடிகர்கள் சூர்யா, அஜித், விஜய், விஷால், சிம்பு உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து மிகப்பெரிய வளர்ச்சியை தொட்டார்.
இடையில் காதல், நிச்சயம் வரை சென்று நின்று போன திருமணம், லீக் வீடியோ, மதுபோதையில் சிக்கியது என்று பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். அதையெல்லாம் உடைத்து தற்போது மீண்டும் தன்னுடைய இரண்டாம் எண்ட்ரியை கொடுத்துள்ளார்.

96, பொன்னியின் செல்வன், லியோ போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார். தற்போது, திரிஷாவால் தான் விஜய் - சங்கீதா பிரிவு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் திரிஷா பற்றிய பல விசயங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவதை போன்று காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் நடிகை திரிஷா கலந்து கொண்டு பேசிய ஒருசில விசயம் வைரலாகியுள்ளது.

கதைக்கு முத்தக்காட்சி தேவைப்பட்டால் பண்ணலாம் என்றும் காஸ்மேட்டிக் சர்ஜரி செய்வீர்களா என்றதற்கு கண்டிப்பாக இல்லை, உடற்பயிற்சி கண்டிப்பாக தேவை.
இதுவரையில் ஏதாவது ஒரு ஆண், உங்களின் கவர்ச்சி காஸ்டியூம் பார்த்து கவர்ந்திருக்க வேண்டும் என்றால் என்னவாக இருக்கனும் என்றதற்கு ஒருபோதும் இல்லை. ஒரு காஸ்டியூம் பார்த்து ஒருவர் கவர்ந்தால், அந்த மாதிரியான ஆள் தேவையா என்று திரிஷா பளீச்சென்று பதிலளித்திருக்கிறார்.