திரிஷா என் மனைவி!! விக்ரம் சீக்கிரம் இறந்து விடுவார்!! கீழ்த்தரமாக நடந்த ஏ எல் சூர்யா தற்போதைய நிலை..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா நடிகர் விஜய்யுடன் பல ஆண்டுகள் கழித்து ஜோடியாக லியோ படத்தில் நடித்துள்ளார். அதன்பின் அஜித், கமல், தனுஷ், சல்மான் கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடவும் இருக்கிறார்.
திரிஷா ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சனைகளையும் சறுக்கல்களையும் சந்தித்து வந்தார். அதையெல்லாம் தாண்டி தற்போது 40 வயதை தொடவிருக்கும் நிலையில் கூட திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன் சிலருடன் திரிஷா திருமணம் என்றும் விஜய் மீது கிரஷ் என்றும் செய்திகள் இணையத்தில் பரவியதை தொடர்ந்து அதற்கு முற்றுப்புள்ளியும் வைத்தார்.
ஆனால் இதற்கு முன் ஏல் எல் சூர்யா என்கிற ஆன்மீக பேச்சாளர் திரிஷா என் மனைவி என்று ஆரம்பித்து தன் மனைவியை போல் திரிஷா நடிப்பதை பார்த்து கடுமையாக திட்டித்தீர்த்து வந்தார்.
மேலும் விக்ரம் கூடிய சீக்கிரம் மரணம் அடைந்துவிடுவார் என்பது பற்றியும் லியோ படத்தில் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை பற்றியும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது அதெல்லாம் ஓரங்கட்டிவிட்டு வேறொரு ரூட்டுக்கு சென்று ஆள் அடையாளம் தெரியாமல் போயுள்ளார்.