ஏன் சார் நல்ல தான இருந்தீங்க, குடும்பத்துல கஷ்டமா..இயக்குனரை கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்
Selvaraghvan
By Tony
தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என காலத்தால் அழியாத படங்களை கொடுத்தவர் செல்வராகவன்.
இவர் தற்போது தன் தம்பியை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். அதோடு சாணிகாகிதம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் செல்வராகவன் திரௌபதி இயக்குனர் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் பலரும் ஏன் சார் பணக்கஷ்டம் ஏதும் வந்துவிட்டதா, எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே என கலாய்த்து வருகின்றனர்.