முட்டிப்போட்டு பிராத்தனை செய்த விஜய்!! நெருங்கிப் பழகிய பிரபலம் கொடுத்த விளக்கம்..
Vijay
Actors
Tamil Actors
Thamizhaga Vetri Kazhagam
By Jai
விஜய்
நடிகர் விஜய் தற்போது தவெக சார்பில் பல இடங்களுக்கு சென்று தேர்தல் பரப்புரை ஆற்றி வருகிறார். நேற்று தேவாலயம் ஒன்றில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்திருந்தார். அவரின் இந்த செயலை பலரும் விமர்சித்தும் கிண்டல் செய்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விவகாரம் குறித்து பிரபல நடிகர் ஸ்ரீமன் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஸ்ரீமன் விளக்கம்
அதில் நடிகர் ஸ்ரீமன், விஜய் நேற்று தேவாலயத்தில் மண்டியிட்டு நடந்து பிரார்த்தனை செய்திருந்தார். அதை அவர் தேர்தல் விளம்பரத்திற்காக செய்கிறார் என்று சிலர் விமர்சிக்கிறார்கள்.

ஆனால், அவர் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் இதுபோன்றுதான் பிரார்த்தனை செய்வார். எனக்கு தெரிந்தவரை கடந்த 30 ஆண்டுகளாக இதை தொடர்ந்து விஜய் செய்து கொண்டு வருகிறார் என்று ஸ்ரீமன் தெரிவித்துள்ளார்.