தவெகவினர் செருப்பை வீசியும் நான் பேச்சை நிறுத்தல!! திமுக திவ்யா சத்யராஜ்..

Sathyaraj Sibi Sathyaraj DMK Gossip Today
By Jai Apr 21, 2026 09:45 AM GMT
Report

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் எப்ரல் 23 ஆம் தேதி நடக்கவுள்ளதால் இன்றுடன் தேர்தல் பிரச்சாரத்தை மாலை 6 மணி வரை நடத்திக்கொள்ளலாம். அதன்பின் யாருக்கும் அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தவெகவினர் செருப்பை வீசியும் நான் பேச்சை நிறுத்தல!! திமுக திவ்யா சத்யராஜ்.. | Tvk Workers Throw Slipper To Divya Sathyaraj

திவ்யா சத்யராஜ்

இந்நிலையில், நேற்று மாலை திமுக சார்பில் பரப்புரையில் சத்யராஜின் மகளும் திமுக பிரமுகருமான திவ்யா பரப்புரை செய்திருந்தார். அப்போது அவர்மீது மர்மநபர்கள் செருப்பு வீச்சில் ஈடுப்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

திவ்யா நேற்று மாலை நான் தெருக்களில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, தவெக உறுப்பினர்கள் சிலர் என்னை நோக்கி செருப்புகளை எறிந்தார்கள். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், நான் என் பேச்சை நிறுத்தவில்லை.

தவெகவினர் செருப்பை வீசியும் நான் பேச்சை நிறுத்தல!! திமுக திவ்யா சத்யராஜ்.. | Tvk Workers Throw Slipper To Divya Sathyaraj

என் சகோதர் சிபியும் நானும் வேறு அரசியல் கருத்துகள் கொண்டிருந்தாலும், நாங்கள் ஒருபோதும் சண்டையிடமாட்டோம். அதுபோலவே விஜய் தன்னுடைய கட்சியினருக்கு பெண்களை மதிக்க வேண்டும் என்று அறிவுரை கூற வேண்டும் என்று திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.