TRP ரேஸில் விஜய் டிவியை துவசம் செய்த சன் டிவி!! டாப் 10 சீரியல் இதோ லிஸ்ட்..
TRP டாப் 10 சீரியல்
சின்னத்திரையில் மக்கள் மத்தியில் அதிகமாக கவனம் பெற்று பார்க்கப்படும் சீரியல்களை வைத்து தான் டிஆர்பி ரேட்டிங் கிடைக்கும். அப்படி டிஆர்பி ரேட்டிங்கில் வாரவாரம் எந்த சீரியல் டாப் 10 இடத்தினை பிடிக்கும் என்ற லிஸ்ட் வெளியாகும். அதேபோல் சீரியலுக்கு நல்ல ரேட்டிங் கிடைத்தால் அதே கதைக்களத்துடன் சீரியலை ஒளிப்பரப்பு செய்ய முயற்சி செய்வார். அப்படி 2025ன் 40வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் என்ன என்ன ரேட்டிங் பெற்று எந்த இடத்தை பிடித்திருக்கிறது என்று பார்ப்போம்..
சன் டிவியில் ஒளிப்பரப்பாகிய இராமாயணம் சீரியல் முடிந்தப்பின் அதற்கு பதிலாக ஹனுமன் என்ற டப்பிங் தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது. ஒளிபரப்பான முதல் வாரமே 6.68 புள்ளிகள் பெற்று 10வது இடத்தை பிடித்துள்ளது. 7.65 புள்ளிகள் பெற்று கடந்த வாரம் 5 ஆம் இடத்தில் இருந்த அய்யனார் துணை சீரியல் இந்த வாரம் 9வது இடத்திற்கு தள்ளபட்டது.
இதனையடுத்து அன்னம் சீரியல் 7.87 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் சிறகடிக்க ஆசை சீரியல் 8.10 புள்ளிகள் பெற்று 7வது இடத்திலும் பிடித்துள்ளது.
மீதமுள்ள 6 இடத்தினை சன் டிவி சீரியல்கள் தான் இடம்பிடித்து அசத்தியிருக்கிறது.
சன் டிவி சீரியல்கள்
8.55 புள்ளிகளுடன் நடிகை கேப்ரியல்லா நடித்து வரும் மருமகள் சீரியல் 6வது இடமும், சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் நடித்து வரும் கயல் சீரியல் 8.98 புள்ளிகளுடன் 5வது இடத்தினை பிடித்திருக்கிறது.
சன் டிவியின் நம்பர் 1 சீரியலாக இருந்த சிங்கப்பெண்ணே சீரியல் சில வாரங்களாக சரிவை சந்தித்து இந்த வாரம் 9.58 புள்ளிடகளுடன் 4வது இடத்தினை பிடித்துள்ளது.
3வது இடத்தில் அன்னம், கயல், மருமகள் சீரியல்களின் மெகா சங்கமம் 9.76 புள்ளிகள் பெற்றுள்ளது. 4வது இடத்தில் இருந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கடகடவென முன்னேறி 9.80 புள்ளிகளுடன் 2வது இடத்தினை பிடித்துள்ளது.
கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் மூன்று முடிச்சு சீரியலுக்கு 10.11 டிஆர்பி ரேட்டிங் கிடைத்து டாப் 1 இடத்தினை பிடித்துள்ளது.