டாப் குக்கு டூப் குக்கு!! எலிமினேட் ஆன நடிகை பிரியங்கா!! கண்ணீற் விட்டு அழுத டூப்..
டாப் குக்கு டூப் குக்கு
சன் டிவியில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் டாப் குக்கு டூப் குக்கு.
கடந்த ஆகஸ்ட் மாதம்17 ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 4வது வாரம் மறைந்த நடிகர் ரோபோ ஷங்கர் எலிமினேட்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து 7வது வாரம் நடிகை கிரண் எலிமினேட் செய்யப்பட்டார்.
இதனையடுத்து 2 வாரங்கள் போட்டியாளர்கள் சிறப்பாக சமைத்து நடுவர்களின் மனதை ஈர்த்தனர். அப்படி இருந்தாலும் சில தவறுகளால் 9வது வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளது, நடிகை பிரியங்கா தான்.
எலிமினேஷன் அறிவித்தப்பின் பிரியங்கா கண்ணீர் விடாமல் பேசிய விஷயமும் அதன்பின் டூப் குக்கு ஆக இருந்த பிரியங்கா கண்ணீரோடு பேசியதும் ரசிகர்கள் மத்தியில் எமோஷனலை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் வைல்ட் கார்ட் மூலம் எண்ட்ரி கொடுத்து அசத்துவார் பிரியங்கா என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.