ராஜ வாழ்க்கை வாழும் உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
உதயநிதி ஸ்டாலின்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் அரசியலில் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின்.
இவர் கதிர்வேலன் காதல், நண்பேண்டா போன்ற காமெடி படங்கள் நடித்து வந்தவர் நிமிர், கண்ணே கலைமானே, சைக்கோ, நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன் போன்ற படங்களில் நடித்தார்.
சினிமா, அரசியல் என இரண்டிலும் கலக்கியவர் கலைஞர் கருணாநிதி. இவரின் பேரன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கியவர் உதயநிதி ஸ்டாலின்.
ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் விஜய், சூர்யா, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்திருந்தார். படங்கள் தயாரித்து வந்தவர் கடந்த 2012ம் ஆண்டு திரைக்கு வந்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அரசியல்-சினிமா என இரண்டிலும் தொடர்ந்து பயணிக்க முடியாது என முடிவு எடுத்து அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில், இன்று தனது 49 - வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தற்போது இவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 33 கோடி என்று கூறப்படுகிறது.