சின்னவர் என்றே அழைக்கலாம்? சின்ன பகவதி பெரிய பகவதி என கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Udhayanidhi Stalin
By Edward Jun 27, 2022 07:19 AM GMT
Report

தமிழக அரசியலில் எம் எல் ஏ-வாகவும், சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளர், விநியோகஸ்தராகவும் திகழ்ந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். அரசியல் எப்படி ஈடுப்பட்டோடு இருக்கிறோ அதேபோல் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் மூலம் பல படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார்.

சில உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கலாம் அடுத்த சிஎம்-மும் ஆகலாம் என்று வாழ்த்தி வருவதை போன்று திமுக கட்சி தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினை மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று அழைத்து வருகிறார்கள்.

சமீபத்தில் பேசிய அவர் தன்னை சின்னவர் என்றே அழைக்கலாம் என்று கூறியுள்ளார். மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று அழைக்க வேண்டாம் என்றும் பேசுவதை விட செயலில் காட்டுவது தான் எனக்கு பிடிக்கும் என்று தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இதனை பலர் சின்ன பகவதி பெரிய பகவதி பாணியில் இப்படி சொல்றாரு என்று கலாய்த்தும் வருகிறார்கள்.

GalleryGallery