கண்ட நாயெல்லாம் அட்வைஸ் பண்ண வேண்டாம், கொந்தளித்த அஜித்
Ajith Kumar
VidaaMuyarchi
By Tony
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவரின் பிறந்தநாள் சமீபத்தில் தான் வந்தது.
இந்த தருணத்தில் ஒரு பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அஜித் குறித்து பிறந்தநாள் ஸ்பெஷலாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இதில், அஜித் தன் இளம் பருவத்தில் எவ்வளவு கோபக்காரர் என்பதை ஒரு நிகழ்வு மூலம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், அஜித் சில வருடங்களுக்கு முன்பு பைக் ரேஸில் மிக ஆர்வமாக இருந்தார்.
அப்போது தயாரிப்பாளர் கேயார், அஜித் பைக் ரேஸை கைவிட வேண்டும், அவரை நம்பி பல தயாரிப்பாளர்கள் பணம் போடுகின்றனர் என கூறினார்.
அதற்கு அஜித் ‘கண்ட நாயெல்லாம் எனக்கு அட்வைஸ் செய்ய வேண்டாம்’ என்று ஒரு பத்திரிகையில் கூறினாராம். இப்படி இருந்த அஜித் தான் இன்று இவ்வளவு அமைதியாக அவர் உண்டு அவர் வேண்டும் உண்டு என்று இருக்கின்றார் என அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.